அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி அமைச்சர் 2வது நாளாக போராட்டம்

Added : ஜன 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி : கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, புதுச்சேரி சட்டசபை வளாகத்தில், இரண்டாவது நாளாக, அமைச்சர் கந்தசாமி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். திராவிடர்களுக்கான வீடு கட்டும் மானியத்தை, 4 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட 15 திட்டங்களுக்கு ஒப்புதல் தராதது குறித்து, கவர்னர் கிரண்பேடிக்கு, துறையின் அமைச்சர் கந்தசாமி கடிதம் அனுப்பினார். இது

புதுச்சேரி : கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, புதுச்சேரி சட்டசபை வளாகத்தில், இரண்டாவது நாளாக, அமைச்சர் கந்தசாமி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

திராவிடர்களுக்கான வீடு கட்டும் மானியத்தை, 4 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட 15 திட்டங்களுக்கு ஒப்புதல் தராதது குறித்து, கவர்னர் கிரண்பேடிக்கு, துறையின் அமைச்சர் கந்தசாமி கடிதம் அனுப்பினார். இது தொடர்பாக விவாதிப்பதற்கு, நேரம் ஒதுக்கி தர கேட்டிருந்தார்.'அமைச்சர் குறிப்பிட்ட விஷயங்கள் தொடர்பாக, துறைகளின் செயலர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது; விரைவில் விவாதிக்க, தேதி, நேரம் தெரிவிக்கப்படும்' என, கவர்னர் கிரண்பேடி பதில் கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை வளாகத்தில், அமைச்சர் கந்தசாமி நேற்று முன்தினம் மாலை, காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினார். அமைச்சருக்கு ஆதரவாக காங்., எம்.எல்.ஏ.,க்களும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அமைச்சர் கந்தசாமியை, முதல்வர் நாராயணசாமி நேற்று காலை சந்தித்து பேசினார். போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், அவருடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ''திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை, பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளோம்.

நிதியை செலவு செய்ய கோப்பு அனுப்பினால், கவர்னர் தடுத்து நிறுத்துகிறார். சட்டசபைதான் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்கிறது. எனவே, தடுத்து நிறுத்த கவர்னருக்கு உரிமையும் கிடையாது; அதிகாரமும் கிடையாது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
12-ஜன-202103:26:05 IST Report Abuse
Baskar நாராயணசாமி அரசு நல்லாவே நடிக்கின்றனர். அடுத்த தடைவை நாம் வெற்றி பெறப்போவதில்லை என்று தெரிந்து தான் மூன்று நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார் நாரா. கொல்லைப்புறமாக வந்தவர் பேசுகிறார் நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று. மேலும் இதுவரையிலும் அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க வக்கில்லாத ஆட்சி தான் நம்ம நாராவின் நல்லாட்சி. ஆனால் இவர் மட்டும் அரசு செலவில் கோவில் கோவிலாக போவாராம் அடிக்கடி சோனியாவை பார்ப்பாராம் இதெல்லாம் யார் அப்பன் வீட்டு காசு. தமிழகத்தில் ஓசி சோறு வீரமணி போல் புதுவையில் ஓசி சோற்றை தின்று விட்டு ஓசியில் ஊர் சுற்றும் ஒரே முதல்வர் நம்ம நாராயணசாமி தாங்கோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X