மதுரை, : மதுரையில் நேற்றுமுன்தினம் பா.ஜ., துணைத்தலைவர் ஹரிஹரசுதன் 42,கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் மீது தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மதமோதலை உருவாக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் திட்டமிட்டு பா.ஜ., அலுவலகத்தை சூறையாடி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.மதுரை திருப்பாலையில் நேற்றுமுன்தினம் பா.ஜ., சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்காக காலை 11:00 மணிக்கு அவர் வந்தபோது கார்களில் பிற நிர்வாகிகள் வந்தனர். அப்போது சாவடி தெருவில் 15 பேர் திடீரென மறித்து பெரிய கல்லை துணைத்தலைவர் ஹரிஹரசுதன் கார் மீது வீசியதில் முன்புற கண்ணாடி சேதமடைந்தது.இதுதொடர்பாக போலீசில் அவர் கொடுத்த புகாரில் கூறியதாவது: எஸ்.டி.பி.ஐ., கட்சி கிளை செயலாளர் திலக் சிக்கந்தர் பெரிய கல்லை துாக்கி எங்கள் காரின் மீது எறிந்தார். இதனால் காரின் முன்புற கட்சி கொடி உடைந்தது.
முன்பகுதி சேதமடைந்தது. அக்கட்சியின் சுல்தான் அலாவுதீன் பெரிய உருட்டு கட்டையால் காரை அடித்தார். இவர்களை பின்தொடர்ந்து வந்த பாப்புலர் பிரெண்ட் ஆப் இந்தியா கட்சி தேஷ்முக், ஆனையூர் பகுதி தலைவர்ேஷக் இப்ராகிம், வடக்கு பகுதி செயலாளர் முகமது ஐசக், எஸ்.டி.பி.ஐ., செயற்குழு உறுப்பினர் ரம்ஜான், ஆனையூர் பகுதி நாசிப், திருப்பாலை பகுதி முகமது இப்ராகிம், ஏ.ஐ.ஐ.சி., தலைவர் முகமது அப்துல்லா உள்ளிட்டோர் விரட்டினர். நாங்கள் உயிருக்கு பயந்து காரை பின்னோக்கி ஓட்டி தப்பித்தோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை வரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.அலுவலகம் சூறைவி.சி., மீது போலீஸ் சந்தேகம்நேற்றுமுன்தினம் மதியம் 'மாஸ்க்' அணிந்து வந்த சிலர், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மதுரை மேலமடை பா.ஜ., அலுவலகத்தை சூறையாடினர். இதுதொடர்பாக அலுவலக உதவியாளர் பாண்டியம்மாள் புகாரில், அண்ணாநகர் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.அக்கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்துஹிந்து மதத்தினர் மனம் புண்படும்படி பேசி வருகிறார். இதற்கு பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
திருப்பாலையில் நேற்றுமுன்தினம் ஒரு தரப்பினர் தகராறு செய்தபின்னணியில் விடுதலை சிறுத்தைகள் இருந்துள்ளனர். தகராறு ஏற்பட்டதை பயன்படுத்தி அந்த தரப்பினர் மீது பழியை போடுவதற்காகவும், மதமோதலை உருவாக்கவும்வி.சி.க.,வினர் திட்டமிட்டு பா.ஜ., அலுவலகத்தை சூறையாடி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE