பொள்ளாச்சி:''கிராமப்புற காவலர்கள், தகவல் சேகரிக்கும் போது, அச்சுறுத்தல், தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தவோ, அதிகார துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது,'' என, ஐ.ஜி. பெரியய்யா அறிவுரை வழங்கினார்.பொள்ளாச்சி சரகத்தில், 81 தாய் கிராமங்கள்; 106 குக்கிராமங்கள், 36 நகராட்சி வார்டுகளும் உள்ளன. ஒவ்வொரு தாய் கிராமத்துக்கு தலா ஒரு போலீஸ் மற்றும் நகராட்சி, 36 வார்டுகளுக்கும் தலா ஒரு போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம், 117 கிராமங்களில், 97 போலீசார் நியமிக்கப்பட்டு, கிராம காவலர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்ட துவக்க விழா, ஆர். பொன்னாபுரத்தில் நடந்தது.கிராம காவலர் விபரம் அடங்கிய அறிவிப்பு பலகையை, ஐ.ஜி., பெரியய்யா திறந்து வைத்து பேசியதாவது: கிராமப்புற காவலர் தனக்கு ஒதுக்கப்பட்ட தாய் கிராமத்துக்கு வாரம் ஒரு முறையாவது நேரடியாக சென்று விபரம் சேகரிக்க வேண்டும்.அக்கிராமத்தில் உள்ள தலைமறைவு எதிரிகள், பதிவாகி உள்ள வழக்குகள் குறித்த விபரங்களை எடுத்துச் செல்ல வேண்டும். மொபைல் எண்ணை அக்கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் கொடுத்து, அவர்களின் எண்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.தாய் கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர், ஊராட்சி தலைவர், பள்ளி தலைமையாசிரியர் ஆகியோரின் மொபைல் எண் மற்றும் விபரங்களை தெரிந்து இருக்க வேண்டும். தகவல் சேகரிக்கும்போது, அச்சுறுத்தல், தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தவோ, அதிகார துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது. காவலர் சீருடையில் மட்டுமே செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE