கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தாமரைக்குளம் தடுப்பணையில், புதர் மற்றும் செடிகள் அடர்ந்துள்ளதால், தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது.தாமரைக்குளத்தில், பொள்ளாச்சி - கோவை ரோட்டின் கிழக்கு பகுதியில், தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதற்கு, கோதவாடி ஓடை வழியாக வரும் தண்ணீர் தடுப்பணை உயரத்துக்கு தேங்கி நின்று, அதன்பின், அதிகளவில் வரும் தண்ணீர், சூலக்கல் ஓடை வழியாக கேரள மாநிலத்திற்கு செல்கிறது.தடுப்பணைக்கு வரும் வழித்தடங்களில் செடி, கொடிகள் அடர்ந்துள்ளது. இதனை கடந்து, தண்ணீர் வரத்து இருந்தது. இந்த தண்ணீர் தடுப்பணையில் வழிந்து செல்ல முடியாத அளவிற்கு செடிகள் நிறைந்து, தண்ணீர் இருப்பதே தெரியாமல் உள்ளது. மேலும், தண்ணீரும் வழிந்து செல்ல முடியாமல் தேங்கியுள்ளது.குடிமராமத்து திட்டத்துக்காக, அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இத்திட்டத்தில், தண்ணீர் வழிந்து செல்லும் தடுப்பணையில் உள்ள செடி, கொடிகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வழியாக வரும் தண்ணீர் சூலக்கல் பகுதிக்கு செல்ல முடியாமல், ஓடையில் தடைபட்டுள்ளதால், விவசாயிகள் சாகுபடி செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பருவமழை காலத்தில், மழை நீரை தேக்கி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நீர் வழித்தடத்தை, பொதுப்பணித்துறையினர் துார்வார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE