கிணத்துக்கடவு:'தினமலர்' செய்தி எதிரொலியாக, கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுப்புதுார் காலனி ரோட்டில் தேங்கி நின்ற கழிவு நீர் செல்ல தற்காலிக வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லாங்காட்டுப்புதுாரில், ரேஷன் கடைக்கு முன் காலனி ரோட்டில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர், பொள்ளாச்சி - கோவை சர்வீஸ் ரோட்டில் கழிவு நீர் வடிகாலில் சென்று வந்தது.சர்வீஸ் ரோடு போடுவதற்காக, ஏற்கனவே இருந்த வடிகால் இடிக்கப்பட்டது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர், வெளியே செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கி நின்று வந்தது.அந்த பகுதியில், ரேஷன் கடை உள்ளதால், மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி செல்லும் முக்கிய வழித்தடமாக இருந்து வந்தது. இங்கு கழிவு நீர் தேங்குவதால், துர்நாற்றம், கொசுத்தொல்லையும் அதிகரித்து வந்தது.இதனை கட்டுப்படுத்த, விரைவில் சர்வீஸ் ரோடு அமைத்து, கழிவு வடிகால் அமைத்துக் கொடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,'தினமலர்' நாளிதழிலில் செய்தி வெளியிடப்பட்டது.செய்தி எதிரொலியாக, வடிகால் வழியாக கழிவு நீர் திருப்பிடப்பட்டு, காலனி ரோட்டினை கடந்து செல்ல தற்காலிக சிறு வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.சாலைப்புதுார் பாலத்தின் வழியாக கழிவு நீர் திருப்பிவிடப்பட்டதால், கழிவு நீர் தேங்கும் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE