பொது செய்தி

தமிழ்நாடு

போயர் சமூக மக்கள் 5 சதவீத ஒதுக்கீடு கேட்பு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், தமிழ்நாடு போயர் சமூக மக்கள் கூட்டமைப்பு சார்பில், ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்ககோரி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமும் மனு கொடுத்தனர்.மனுவில், கூறியிருப்பதாவது:தமிழகத்தில் ஏழ்மையிலும், வறுமையில் வாழும் போயர், ஒட்டர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும், சட்டநாதன் கமிஷன் அறிக்கை படியும் ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு வழங்க

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், தமிழ்நாடு போயர் சமூக மக்கள் கூட்டமைப்பு சார்பில், ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்ககோரி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமும் மனு கொடுத்தனர்.மனுவில், கூறியிருப்பதாவது:தமிழகத்தில் ஏழ்மையிலும், வறுமையில் வாழும் போயர், ஒட்டர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும், சட்டநாதன் கமிஷன் அறிக்கை படியும் ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.இதற்காக, கையெழுத்து இயக்கம் நடத்தி, தாசில்தாரிடமும், நல்லட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலரிடமும், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன், பொதுச்செயலாளர் குமரன், நிர்வாக செயலாளர் துரைராஜ், பொருளாளர் சின்னசாமி ஆகியோர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X