ரேபரேலி : உத்தர பிரதேச முதல்வரை விமர்சித்த புகாரில் டில்லியை சேர்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி நேற்று கைது செய்யப்பட்டார். அதற்கு முன் அவர் மீது இளைஞர் ஒருவர் மையை வீசினார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. டில்லியை சேர்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி கடந்த வாரம் உத்தர பிரதேசத்துக்கு வந்திருந்தார். அப்போது உ.பி. முதல்வர் மாநில அரசு மற்றும் மாநில மருத்துவமனைகளுக்கு எதிராக சர்ச்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது பற்றி பா.ஜ. பிரமுகர் சோம்நாத் சாஹு போலீசில் புகார் அளித்தார்.இந்நிலையில் உ.பி. மாநிலம் ரேபரேலிக்கு சோம்நாத் பார்தி நேற்று வந்தார்.
விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர் கட்சியினரை சந்திப்பதற்காக வெளியே வந்தார்.அப்போது இளைஞர் ஒருவர் சோம்நாத் பார்தி மீது மையை வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து சோம்நாத் பார்தியை போலீசார் கைது செய்தனர். உ.பி. முதல்வரையும் மாநில அரசையும் தரக்குறைவாக விமர்சித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE