புதுடில்லி : ''நாட்டின் பொருளாதாரம் வரும் 2022ம் ஆண்டில் 350 லட்சம் கோடி ரூபாய் இலக்கை எட்டிப்பிடிக்க நிலக்கரித்துறை முக்கிய பங்காற்றும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:nநிலக்கரி சுரங்க ஏலம் வணிக மயமாக்கப்பட்டு இருப்பதால் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு நிலக்கரி கிடைப்பது எளிதாகி இருக்கிறது.சுயசார்பு இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதில் நிலக்கரித்துறை குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது.வரும் 2022ல் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகையில் நம் பொருளாதாரத்தை 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதில் நிலக்கரித்துறை முக்கியப் பங்காற்றும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE