பொது செய்தி

தமிழ்நாடு

உலர்களங்கள் 'வெறிச்!'தேங்காய் வரத்து முழுதும் விற்பனை:விடாது பெய்யும் மழையாலும் சிக்கல்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியில், தேங்காய் சீசன் இல்லாததால், தேங்காய் வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில், தொடர் மழை பெய்வதால் கொப்பரை உற்பத்தியும் தடைபட்டுள்ளதால், உலர்களங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் நெகமம் பகுதிகளில் தென்னை சாகுபடியே பிரதானமாக உள்ளது. இதனால், இப்பகுதியில், கொப்பரை மற்றும் தென்னை நார்
 உலர்களங்கள் 'வெறிச்!'தேங்காய் வரத்து முழுதும் விற்பனை:விடாது பெய்யும் மழையாலும் சிக்கல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியில், தேங்காய் சீசன் இல்லாததால், தேங்காய் வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில், தொடர் மழை பெய்வதால் கொப்பரை உற்பத்தியும் தடைபட்டுள்ளதால், உலர்களங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் நெகமம் பகுதிகளில் தென்னை சாகுபடியே பிரதானமாக உள்ளது. இதனால், இப்பகுதியில், கொப்பரை மற்றும் தென்னை நார் உற்பத்தி அதிகரித்துள்ளது.தென்னை சார்ந்த தொழில்களால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தற்போது, தேங்காய் சீசன் இல்லாததால், தேங்காய் பறிப்பு குறைந்துள்ளது. தேங்காய் வரத்து இல்லாத நிலையில், உற்பத்தியாகும் தேங்காய்கள் நேரடி விற்பனைக்கு சென்று விடுகின்றன. இதற்கு, கூடுதல் விலையும் கிடைக்கிறது.இந்நிலையில், உற்பத்தி செலவும் அதிகம் என்பதால், கொப்பரை உற்பத்தி முடங்கியுள்ளது.மேலும், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகா பகுதியில், தொடர்ந்து மழை பெய்வதாலும், புயலுக்கு பின், தெளிவான வானிலை இன்றி, மேக மூட்டமாக காணப்படுகிறது. காற்றில் அதிக ஈரப்பதம் உள்ளது. இதனால், கொப்பரை முழுவதும் தடைபட்டுள்ளது.கொப்பரை தயாரிக்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால், தற்போது, ஒட்டு மொத்த கொப்பரை உற்பத்தி களங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேல் கூறியதாவது:தேங்காய் சீசன் மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்குகிறது. சீசன் துவக்கத்தில் குறைந்தளவே தேங்காய் கிடைக்கும் என்பதால், நேரடியாக விற்பனைக்கு சென்று விடும்.தேங்காய் விலையை பொருத்தே, கொப்பரை உற்பத்தி ஏப்ரல் இறுதியில் துவங்க வாய்ப்பு உள்ளது. தேங்காய் விலை அதிகமாக இருந்து, கொப்பரை விலை குறைவாக இருந்தால், கொப்பரை உற்பத்தி துவங்குவது தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது.கொப்பரை களங்கள் ஏற்கனவே இரண்டு மாதம் செயல்படாமல் உள்ள நிலையில், சொந்த ஊர்களில் இருந்து தொழிலாளர்கள் திரும்ப மூன்று மாதங்களாகும். தவிர, ஏப்ரலில், தமிழகத்தில் தேர்தல் நடந்தால், மேலும் சில நாட்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை தேவைப்படும். எனவே, ஏப்ரல் கடைசியில் கொப்பரை உற்பத்தி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, காங்கேயம் வெளிமார்க்கெட்டில், கொப்பரை கிலோவுக்கு, 123 ரூபாய் விலை கிடைக்கிறது; ஸ்பெஷல் கொப்பரை கிலோ, 124; தேங்காய் பவுடர் கிலோ, 192; தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்), 2,750; தேங்காய் பச்சை (டன்), 38 ஆயிரம், கருப்பு தேங்காய் (டன்) 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X