வால்பாறை:வால்பாறையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில், வால்பாறையில் இந்த ஆண்டு முதல் சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.இது குறித்து, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்குமார் கூறியதாவது: வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, நகராட்சி சார்பில், விழா நடத்தப்படுகிறது. பொங்கல் விழாவையொட்டி நாளை (13ம் தேதி) தப்பாட்டம், பறை இசை , பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. வால்பாறை நகராட்சி அலுவலக வளாகத்தில், நாள் முழுவதும் விழா நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE