நாளை பொங்கல் விழா: சுற்றுலாத்துறை தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை பொங்கல் விழா: சுற்றுலாத்துறை தகவல்

Added : ஜன 12, 2021
Share
வால்பாறை:வால்பாறையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில், வால்பாறையில் இந்த ஆண்டு முதல் சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.இது குறித்து, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்குமார் கூறியதாவது: வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் பொங்கல் விழா நடத்தப்படுகிறது.

வால்பாறை:வால்பாறையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில், வால்பாறையில் இந்த ஆண்டு முதல் சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.இது குறித்து, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்குமார் கூறியதாவது: வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, நகராட்சி சார்பில், விழா நடத்தப்படுகிறது. பொங்கல் விழாவையொட்டி நாளை (13ம் தேதி) தப்பாட்டம், பறை இசை , பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. வால்பாறை நகராட்சி அலுவலக வளாகத்தில், நாள் முழுவதும் விழா நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X