பொள்ளாச்சி, உடுமலையில் பெருமாள் கோவில்களில், கூடாரவல்லி உற்சவம் நடந்தது.உடுமலை, பெரியகடை பூமிநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் மார்கழி, தனுர் மாத பூஜை, பாவை நோன்பு நிறைவு கூடாரவல்லி, உற்சவம் சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. பகல் பத்து மற்றும் இராபத்து உற்சவத்தின் நிறைவாக, நேற்று, கூடார வல்லி உற்சவ பூஜை நடந்தது. பெருமாளுக்கு, சிறப்பு அபிேஷக ஆராதனை, பஜனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் ஆண்டாள் சுவாமிகள் சேர்த்தி சேவை நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. நேற்றுமுன்தினம் காலை, 9:00 மணிக்கு பூமிலட்சுமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு, சுவாமிகளுக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, கோ பூஜையுடன் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது.காலை, 8:00 மணிக்கு பாராயண சேவை நடந்தது. தொடர்ந்து, ராஜ விநாயகர் கோவில் மற்றும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து ஆண்டாள் நாச்சியார் கோவிலுக்கு, பக்தர்கள் திருக்கல்யாண சீர் கொண்டு வந்தனர். சிறப்பு அலங்காரத்துடன், ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் விதிமுறைகளை பின்பற்றி வழிபட்டனர்.பொள்ளாச்சிஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மார்கழி, 27ம் நாளான நேற்று, கூடார வள்ளி சிறப்பு பூஜை நடந்தது.விழாவையொட்டி, ஒன்பது வகையான அபிேஷகம், ஒன்பது வகையான மலர் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், மஞ்சள் சரடு, கற்கண்டு, வாழைபழம், நெல்லி, வெற்றிலை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், கூடாரவல்லியையொட்டி காலை, 5:00 மணிக்கு திருமஞ்சனம், காலை, 7:00 மணிக்கு தீபாராதனை, சாற்று முறை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை, 3:00 மணிக்கு துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து சீர்தட்டம் எடுத்து வருதல், மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், ஊஞ்சல் சேவை, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்த்கள், சமூக இடைவெளி பின்பற்றி வழிபாடு செய்தனர்.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன
- நிருபர் குழு -.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE