பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு 11 மாத சம்பளம் நிலுவை:பள்ளிகளில் சுகாதாரம் மேற்கொள்வதில் சிக்கல்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
உடுமலை:துாய்மைப்பணியாளர்களுக்கு, 11 மாத கால ஊதியம் நிலுவையில் இருப்பதால், பள்ளிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக, தற்காலிக துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இப்பணியாளர்களுக்கு, துவக்கப்பள்ளியில் ஊதியமாக, 750 ரூபாய், நடுநிலைப்பள்ளியில்,

உடுமலை:துாய்மைப்பணியாளர்களுக்கு, 11 மாத கால ஊதியம் நிலுவையில் இருப்பதால், பள்ளிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக, தற்காலிக துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பணியாளர்களுக்கு, துவக்கப்பள்ளியில் ஊதியமாக, 750 ரூபாய், நடுநிலைப்பள்ளியில், ஆயிரம் ரூபாய், உயர்நிலைப்பள்ளிக்கு, 1,500 ரூபாய், மேல்நிலைப்பள்ளிக்கு, 2,000 ரூபாய் என அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரிப்பது, குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை இவர்கள் செய்கின்றனர்.அரசு ஒதுக்கீடு செய்துள்ள ஊதியம் பற்றாக்குறையாக இருப்பதால், பல பள்ளிகளில் ஆசிரியர்கள் கூடுதலாக வழங்கி, துாய்மைப்பணியாளர்களுக்கு பணி வழங்குகின்றனர். கடந்த, 2020 பிப்., மாதம் முதல், இவர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த, 11 மாதங்களாக ஊதியம் தாமதமாகிறது.பள்ளிகள் திறக்கப்பட்டு, ஆசிரியர்கள் வந்து கொண்டிருப்பதால், துாய்மைப்பணிகளுக்கு அவர்கள் ஊதியம் வழங்குகின்றனர்.
இருப்பினும், முழுமையான தொகை இல்லாததால், துாய்மைப்பணியாளர்கள், இப்பணிக்கு வர மறுக்கின்றனர்.தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ''பகுதி நேர ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கி வருகிறது. ஆனால், பள்ளிகளை துாய்மையாக பராமரிக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் நிலுவையில் இருப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு, பள்ளி பராமரிப்பையும் பாதிக்கிறது. இந்நிலையில், பள்ளிகளை தயார்நிலையில் வைத்திருப்பதற்கு, துாய்மைப்பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அரசு உடனடியாக அவர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X