பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, மேம்பால பணிகள் காரணமாக வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக செல்கின்றன. அதில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலக ரோட்டில் இருந்து, நேதாஜி ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக ஆனைமலை மற்றும் கேரளா மாநிலத்துக்கு வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், ரோடு குறுகலாக உள்ளதுடன், ஒரு சில வாகன ஓட்டுனர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.மேலும், மார்க்கெட் ரோட்டில், அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்கப்பட்டதால், அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு, வாகனங்கள் சந்தை ரோடு வழியாக திருப்பி விடப்பட்டதால், எதிர் எதிராக வாகனங்கள், குறுகலான ரோட்டில் வந்ததாலும் நெரிசல் ஏற்பட்டது.ரோட்டில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் அறிவுறுத்தி நெரிசலை கட்டுப்படுத்தினர். இதுபோன்று நெரிசல் பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, போலீசார் முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE