பொது செய்தி

தமிழ்நாடு

சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரிப்பு: 'களை' கட்டியது சேவல் விற்பனை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலையில் நேற்று கூடிய ஆட்டுச்சந்தைக்கு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.உடுமலை நகராட்சி வாரச்சந்தையில், வாரம்தோறும் திங்கள் கிழமை, காலை, 6:30 முதல், 9:30 வரை, ஆடு, கோழிகள் விற்பனைக்கான சந்தை கூடி வருகிறது.சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வழக்கமாக, உடுமலை சந்தைக்கு, 700 ஆடுகள் வரை விற்பனைக்கு

உடுமலை:உடுமலையில் நேற்று கூடிய ஆட்டுச்சந்தைக்கு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.உடுமலை நகராட்சி வாரச்சந்தையில், வாரம்தோறும் திங்கள் கிழமை, காலை, 6:30 முதல், 9:30 வரை, ஆடு, கோழிகள் விற்பனைக்கான சந்தை கூடி வருகிறது.சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வழக்கமாக, உடுமலை சந்தைக்கு, 700 ஆடுகள் வரை விற்பனைக்கு வரும்.பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை தினங்களாக உள்ளதால், ஆடுகள் வர்த்தகம், விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.வியாபாரிகள், வளர்ப்புக்காக ஆடு வாங்குவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் என, ஆயிரக்கணக்கானவர்கள் ஆடுகள் வாங்க வந்திருந்தனர். இதனால், ஆடுகளுக்கு கூடுதல் விலை கிடைத்தது. குறைந்தபட்சம், குட்டிகள் 3 ஆயிரம் ரூபாய் முதல், வயதுக்கு ஏற்ப, 15 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.அதே போல், நாட்டுக்கோழிகள், சேவல், கட்டுச்சேவல் என, 800க்கும் மேற்பட்ட கோழிகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. பண்டிகை கொண்டாட்டத்திற்காக, கட்டுச்சேவல் விற்பனை அதிகரித்தது, ரகத்திற்கு ஏற்ப, 450 முதல், 8 ஆயிரம் ரூபாய் வரை கோழி, சேவல்கள் விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X