தமிழக நிகழ்வுகள்:-
1. பெண்ணிடம் ரூ. 27 லட்சம் மோசடி
குமுளி : கேரளா குமுளியில் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ. 27 லட்சம் மோசடி செய்த ராஜிவை 35, கேரள போலீசார் கைது செய்தனர்.

2. பலாத்கார மேஸ்திரிக்கு 39 ஆண்டு சிறை
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், நத்தகயத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி ஆசைதம்பி, 31; இவர், தன் உறவினரின், 14 வயது மகளை, 2018ல் பாலியல் பலாத்காரம் செய்ததில், அவர் கர்ப்பமானார். பர்கூர் அனைத்து மகளிர் போலீசார், ஆசைதம்பி மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். 39 ஆண்டுகள் சிறை, 61 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

3. மாசு கட்டுப்பாட்டு அதிகாரியின் திருமயம் வீட்டில் திடீர் சோதனை
புதுக்கோட்டை : சென்னை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பாளர் பாண்டியனின், திருமயம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. 12 பவுன் நகை, பணம் திருட்டு
சரவணம்பட்டி:கோவை சரவணம்பட்டி அண்ணாநகரை சர்ந்தவர் கணேசன்,39. இவர் தோட்டத்து சாலையில் குடியிருந்து வருகிறார். ஜனவரி 8 அன்று, வீட்டை பூட்டி விட்டு தாளவாடி சென்று விட்டார். நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. படுக்கை அறையில் இருந்த பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் திருடு போயிருந்தது. புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

5. தொழிலாளி கொலை மூன்று பேர் கைது
பேர்ணாம்பட்டு : வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த சாமரிஷிகுப்பத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஹேமந்த், 25; அவரது பிறந்தநாளை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள ஏரிக்கரை அருகே, நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது கேக் வெட்டகூடாது என தடுத்த திமுக முன்னாள் ஒன்றிய செயலர் மகனுடன் மோதல் ஏற்பட்டது. இதில் தொழிலாளி கொலை செய்யப்பட்டதால் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் குற்றம்:-
70 குழந்தைகளிடம் அத்துமீறல்
லக்னோ: உத்தர பிரதேசத்தில், 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுடன், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு, அதை இணையத்தில் பதிவிட்ட அரசு இன்ஜினியர் ராம் பவன், 40, கடந்த ஆண்டு, சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், இவர், 70 குழந்தைகளுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, தற்போது உறுதியாகி உள்ளது.

உலக நடப்பு:-
12 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
சான்டா குரூஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், படகு ஓட்டுவதற்கான பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், நேற்று முன்தினம், துறைமுகத்திற்கு அருகே உள்ள கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு ஏற்பட்ட ராட்சத அலையால், அவர்களின் நான்கு படகுகளும் கவிழ்ந்தன. இதில், சிறுவர்கள், 12 பேர், நீரில் தத்தளித்தனர். தகவலறிந்து, கடலுக்குள் சென்ற மீட்புக் குழுவினர், நீரில் தத்தளித்த, 12 சிறுவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE