சென்னை : 'முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவுத்துாணை அமைக்கும் பணி மீண்டும் துவக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:யாழ்ப்பாணம் பல்கலையில், இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவுத்துாணை, மீண்டும் அதே இடத்தில் அமைக்கும் பணி துவங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.நினைவுத்துாணை இடித்த சிங்கள இனவெறி அரசின் செயலை கண்டித்து, தமிழ் மாணவர்கள் ஒன்பது பேர், காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டதன் பயனாகவே, இது சாத்தியமாகி இருக்கிறது.தங்கள் உடலை வருத்தி, இதை சாதித்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.
தமிழர்கள் ஒன்று பட்டால், குறிப்பாக, மாணவர்கள் ஒன்றுபட்டால், இலக்குகளை எட்ட முடியும் என்பதற்கு, இது உதாரணம்.ஈழத்தமிழர்களின், மாணவர்களின் இந்த ஒற்றுமையும், போர்க்குணமும், தமிழீழம் என்ற இறுதி இலக்கை எட்டும் வரை நீடிக்க வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE