அன்னூர்:நெசவு தறிக்காரர்கள் இயக்கம் சார்பில், கமலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.தமிழ்நாடு நெசவு தறிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், நேற்று அன்னூர் வந்த, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது :சொந்த இடமோ, வீடோ இல்லாத நெசவாளர்களுக்கு, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். தனியாரிடம் நெசவு செய்யும் நெசவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களில் இருந்து பாவு, நூல் வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி ஏற்படுத்த வேண்டும். பேறுகால நிவாரண நிதி வழங்க வேண்டும். யூனிட் கட்டுப்பாடில்லாத இலவச மின்சாரம் வேண்டும். வங்கிகளில் பிணையம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும். ஆதார் அட்டைக்கு இணையாக அடையாள அட்டை வழங்க வேண்டும். வங்கி கடனுக்கான தவணையை அபராதம் இல்லாமல் தாமதமாக செலுத்த அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE