பெ.நா.பாளையம்:சின்னதடாகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பள்ளத்தில் இறங்கி நின்றது.இதனால், 35 பயணிகள் உயிர் தப்பினர். கோவையில் இருந்து ஆனைகட்டி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று மாலை, 4.00 மணிக்கு சென்று கொண்டிருந்தது. சின்னதடாகத்துக்குள் வேகமாக நுழையும்போது, புதுப்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள சிறிய பள்ளத்தில் இறங்கியது.மரத்தின் கிளை, பஸ் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றதால், பஸ் நின்றது. இவ்விபத்தில், 35 பயணிகள் உயிர் தப்பினர். காயமடைந்த பஸ் டிரைவர் அழகர்சாமி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE