பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டீல் விலை உயர்வு கண்டித்து கட்டுமான பணி இன்று நிறுத்தம்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
கோவை:ஸ்டீல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, அரசு பணிகளை இன்று (ஜன., 12) ஒரு நாள் நிறுத்துவதாக, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் சந்திரபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:மூன்று மாதத்துக்கு முன், ஒரு டன் ஸ்டீல், 36 ஆயிரம் ரூபாயாக இருந்தது; இப்போது, 70 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அடிக்கடி

கோவை:ஸ்டீல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, அரசு பணிகளை இன்று (ஜன., 12) ஒரு நாள் நிறுத்துவதாக, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் சந்திரபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:மூன்று மாதத்துக்கு முன், ஒரு டன் ஸ்டீல், 36 ஆயிரம் ரூபாயாக இருந்தது; இப்போது, 70 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அடிக்கடி விலை உயர்வதால், கட்டுமான தொழில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அரசு மற்றும் தனியார் துறைகளில் கட்டுமான பணி எடுத்தவர்கள், பெரும் நஷ்டத்தை சந்தித்து மீள முடியாமல் தவிக்கின்றனர். சிமென்ட் மற்றும் ஸ்டீல் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து சிண்டிகேட் அமைத்து, விலை ஏற்றம் செய்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும்.விலையேற்றத்தை கண்டித்து, இன்று (12ம் தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் வாரியம் உட்பட அனைத்து துறைகளிலும் கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு பணி, ஒரு நாள் முழுவதும் நிறுத்தி வைக்கப்படும். தனியார் கட்டுமான அமைப்புகள், பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா, கோவை பில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் காண்ட்ராக்டர்கள் சங்கத்தினரும் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X