பொது செய்தி

தமிழ்நாடு

திருமூர்த்தி அணை திறப்பு 94,362 ஏக்கர் பயன்பெறும்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
உடுமலை:திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி.,3ம் மண்டல பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.பி.ஏ.பி., பாசனத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நான்கு மண்டலமாக பிரித்து, ஆறு மாதத்துக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது.இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற்ற நிலையில், திட்ட தொகுப்பு
 திருமூர்த்தி அணை திறப்பு 94,362 ஏக்கர் பயன்பெறும்

உடுமலை:திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி.,3ம் மண்டல பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.பி.ஏ.பி., பாசனத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நான்கு மண்டலமாக பிரித்து, ஆறு மாதத்துக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது.இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற்ற நிலையில், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து சேகரிக்கப்பட்டது. நேற்று மூன்றாம் மண்டல பாசன நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. உரிய இடைவெளி விட்டு, ஐந்து சுற்றுக்களில், 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது.இதன் வாயிலாக, திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் ஆகிய தாலுகாக்களில், 71 ஆயிரத்து 561 ஏக்கர், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சூலுார் தாலுகாக்களில், 22 ஆயிரத்து 801 ஏக்கர் என, 94 ஆயிரத்து 362 ஏக்கர் பயன்பெறுகிறது.திருமூர்த்தி அணையில், நேற்று காலை நிலவரப்படி, மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கன அடியில், 1,763.30 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு, 573 கன அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X