சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வார்னிஷ் ஊற்றி தீ மூட்டி குளிர் காய்ந்தவர் பலி

Added : ஜன 12, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுாரில் வார்னிஷ் பயன்படுத்தி, தீ மூட்டி குளிர் காய்ந்த பெண் உயிரிழந்தார்; இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் கஜபதி,67; இவரது மனைவி, கலாவதி,65, மகன் மகேந்திரன்,37. மூவரும் நேற்று முன்தினம் இரவு, வார்னிஷ் பயன்படுத்தி, வீட்டில் தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளனர்.நேற்று காலை வெளியே வராததால், அருகில்

குன்னுார்:குன்னுாரில் வார்னிஷ் பயன்படுத்தி, தீ மூட்டி குளிர் காய்ந்த பெண் உயிரிழந்தார்; இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் கஜபதி,67; இவரது மனைவி, கலாவதி,65, மகன் மகேந்திரன்,37. மூவரும் நேற்று முன்தினம் இரவு, வார்னிஷ் பயன்படுத்தி, வீட்டில் தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளனர்.நேற்று காலை வெளியே வராததால், அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அருவங்காடு போலீசார் அவர்களை மீட்டு, குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், கலாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குன்னுார் போலீசார் விசாரிக்கிகின்றனர்.போலீசார் கூறுகையில், 'குளிர்காலங்களில், வீட்டுக்குள் தீ மூட்டி குளிர்காயும் போது, வார்னிஷ், அடுப்பு கரி பயன்படுத்தி குளிர்காய கூடாது. இதனால், மூச்சு திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X