பந்தலுார்:பந்தலுார் அருகே, வருவாய் துறைக்கு, 30 ஆண்டுகளாக குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால், 25 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, முக்கட்டி பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான, 25 ஏக்கர் நிலம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இங்கு உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டம், ஒரு பங்களா ஆகியவை, கேரளாவை சேர்ந்த கோபிநாதன் என்பவருக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.அவர் கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில், அவரது வாரிசு தாரர்கள், பலருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளனர். தற்போது, முஸ்தபா என்பவர் குத்தகைதாரராக உள்ளார். இந்த இடத்துக்கு, 3.5 கோடி ரூபாய் குத்தகை பாக்கி இருந்தது. இந்த நிலம் தொடர்பாக, சென்னை ஐகோர்டில், வழக்கு நடந்து வரும் நிலையில், குத்தகை தொகையை செலுத்த தொடர்ந்து வருவாய் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதுவரை செலுத்தப்படவில்லை.நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி, வருவாய் ஆய்வாளர் கிரிஜா, வி.ஏ.ஓ. அசோக்குமார் ஆகியோர், தேயிலை மற்றும் காபி தோட்டம், பங்களா ஆகியவற்றை கையகப்படுத்தி, அறிவிப்பு பலகை வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE