புதுடில்லி : லடாக்கில் உள்ள இந்திய -- சீன எல்லை பகுதிகளில், நம் படையினரின் தயார் நிலை குறித்து அறிய, முப்படைகளின் தலைமை தளபதி, ஜெனரல் பிபின் ராவத், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய --- சீன எல்லை பகுதியில், லடாக்கில், இரு நாடுகளுக்கு இடையே, கடந்த எட்டு மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.எதிர்பார்ப்புஇருதரப்பினரும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்துள்ளனர். ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான அமைதி பேச்சு, எட்டு சுற்றுக்கள் நடக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த கடைசி சுற்று பேச்சின் போது, பிரச்னைக்குரிய சில பகுதிகளில் இருந்து, படைகளை திரும்ப பெற, இருதரப்பினரும் சம்மதித்தனர்.

இந்நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி, ஜெனரல் பிபின் ராவத், லடாக் பகுதிக்கு நேற்று சென்றார். கிழக்கு லடாக்கின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், நம் படையினரின் தயார் நிலை குறித்தும், விரிவாக ஆய்வு செய்தார். லே பகுதியின், 14வது படைப்பிரிவின் கமாண்டர், லெப்டினன்ட் ஜெனரல், பி.ஜி.கே.மேனன், பாதுகாப்பு நிலவரம் குறித்து, பிபின் ராவத்துக்கு விளக்கினார்.இன்றைக்கு, காஷ்மீர் பகுதியில், பிபின் ராவத் ஆய்வு மேற்கொள்வார் என,
எதிர்பார்க்கப்படுகிறது.கடலோர பாதுகாப்புபயிற்சி முகாம்கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கடற்படை மற்றும் கடலோர காவல் படை இணைந்து, கடல் கண்காணிப்பு என்ற பெயரில், இன்றும், நாளையும், நாடு தழுவிய பயிற்சி முகாமை நடத்துகின்றன.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கடலோர பகுதிகளில், இந்த பயிற்சி நடக்கிறது. இதில், கடற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, போலீஸ், சுங்கத் துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, மீன்வளத் துறை, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பங்கு பெறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE