கோவை:''தமிழ்நாடு வேளாண்மை பல்கலை புதுமைத்தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ஆராய்ச்சியில் முன்னோடியாக விளங்குகிறது,'' என்று மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் பொன்னையன் கூறினார்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தமிழ்நாடு புதுமைத்தொழில்நுட்ப முன்னேற்றத் திட்டத்தை, முன்னாள் நிதியமைச்சரும், மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவருமான பொன்னையன் நேற்று ஆய்வு செய்தார்.விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள்மத்தியில் அவர் பேசியதாவது:கடந்த ஐந்தாண்டு காலத்தில், பல்வேறு பரிமாண வளர்ச்சியை இப்புதுமைத் திட்டம் கொண்டுவந்துள்ளது. விவசாய நிலப்பரப்பளவை உயர்த்துதல், மகசூல், விளைச்சலை அதிகரித்தல் மற்றும் அதிக வருவாயோடு சுயதொழில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும்.வேளாண் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன் மேம்பட வேளாண் விஞ்ஞானிகளின் பணி முக்கியமானது. புதுமைத் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ஆராய்ச்சியில், வேளாண்மை பல்கலை முன்னோடியாக விளங்குகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, துணைவேந்தர் குமார் அதிநவீன ஆய்வகம் மற்றும் புதுமைத்திட்ட செயல்பாடுகளை விளக்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE