பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர் விடுப்பு எடுக்க தடை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால், வரும் 19ம் தேதி வரை, டிரைவர், நடத்துனர் உட்பட அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் வரும் 19ம் தேதி வரை, பயணிகள் சொந்த ஊர் செல்ல வசதியாக, 16, 221 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து பகுதிகளுக்கும், வழக்கத்தை விட, கூடுதலாக, 60 சதவீத பஸ்

திருப்பூர்:பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால், வரும் 19ம் தேதி வரை, டிரைவர், நடத்துனர் உட்பட அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் வரும் 19ம் தேதி வரை, பயணிகள் சொந்த ஊர் செல்ல வசதியாக, 16, 221 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து பகுதிகளுக்கும், வழக்கத்தை விட, கூடுதலாக, 60 சதவீத பஸ் இயக்கப்படுவதால், இயக்கம் மற்றும் கண்காணிப்பு குழு, ஒவ்வொரு கோட்டம் மற்றும் மண்டலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்டோர், இன்று முதல் வரும் 19ம் தேதி வரை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர மற்றும் வார விடுப்புக்கு அனுமதி இல்லை.பயணிகள் அதிகளவில் பயணிக்க வாய்ப்பு இருப்பதால், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனையில் தொடர்ந்து பணியில் இருக்கும்படி, போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X