பொது செய்தி

தமிழ்நாடு

கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம் 

Updated : ஜன 12, 2021 | Added : ஜன 12, 2021
Share
Advertisement
கோவை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிறுத்த வலியுறுத்தி, கோவையில், நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கண்ணாடி துண்டுகள் மீது நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.கோவை, காந்திமாநகர் பகுதியை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் கலையரசன். இவர், கிராமிய கலைகளில் பல்வேறு உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். இவரது மனைவி பிரகலட்சுமி, தற்போது, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில்,
கண்ணாடி துண்டுகள்,  நிறைமாத கர்ப்பிணி, நடனம்

கோவை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிறுத்த வலியுறுத்தி, கோவையில், நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கண்ணாடி துண்டுகள் மீது நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

கோவை, காந்திமாநகர் பகுதியை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் கலையரசன். இவர், கிராமிய கலைகளில் பல்வேறு உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். இவரது மனைவி பிரகலட்சுமி, தற்போது, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தாக்குதல்களை நிறுத்த கோரி பிரகலட்சுமி, சிவப்பு நிறப்புடவை அணிந்து, ஆக்ரோஷமாக, கண்ணாடி துண்டுகள் மீது, 'காளி நடனமாடி' விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நடனத்தால், 'பீனிக்ஸ் புக் ஆப் ரெக்கார்டு' புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

கோவையை சேர்ந்த கலையரசன் , பிரகலட்சுமி தம்பதியினர் நாட்டுப்புற கலைஞர்கள். பிரகலட்சுமி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து காளி வேடம் அணிந்து நடனம் ஆடினார். கண்ணாடி துண்டுகள் மீது அவர் ஆடிய நடனம், பீனிக்ஸ் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்தது.

நிறைமாத கர்ப்பிணியான பிரகலட்சுமி கூறுகையில், ''நாடு முழுவதும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும்நோக்கில் இந்த முயற்சியை செய்தேன். ஒவ்வொரு பெண்களுக்குள், ஒரு காளி இருக்கிறாள் என்பதை அனைவருக்கும் தெரிய வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X