பொது செய்தி

தமிழ்நாடு

வீழ்ச்சி தரும்... அவசரம் கூடாது என 'அட்வைஸ்'

Added : ஜன 12, 2021
Share
Advertisement
கொரோனா ஊரடங்கு பாதிப்புகளில் இருந்து மீண்டும் வரும் தொழில் துறையினர், எதிர்கால தேவைகள், மூலப்பொருட்கள் விலை ஏற்றம், இறக்கம், ஆட்கள் பற்றாக்குறை போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.அந்த வகையில், தேசிய, சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி ஏற்றுமதியாளர்கள், நுாற்பாலைகள், ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள், ஜவுளித் துறை சார்ந்த
 வீழ்ச்சி தரும்...  அவசரம் கூடாது என 'அட்வைஸ்'

கொரோனா ஊரடங்கு பாதிப்புகளில் இருந்து மீண்டும் வரும் தொழில் துறையினர், எதிர்கால தேவைகள், மூலப்பொருட்கள் விலை ஏற்றம், இறக்கம், ஆட்கள் பற்றாக்குறை போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
அந்த வகையில், தேசிய, சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி ஏற்றுமதியாளர்கள், நுாற்பாலைகள், ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள், ஜவுளித் துறை சார்ந்த அனைவரும் தற்போது ஜவுளித்துறையில் நிலவிவரும் நிலைமை குறித்து ஆலோசித்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
இதன்மூலம் அனைத்து துறையினரும் தேவைக்கு ஏற்ப மூலப்பொருட்களை கொள்முதல் செய்து, சாதகமான நிலையை உருவாக்க முடியும் என்பது, பரவலான கருத்து. 'கோவிட் 19' காலகட்டத்தில் ஜவுளித்துறையில் உள்ள பல்வேறு பிரிவினருக்கும் இடையே இருப்பு குறைந்து காணப்பட்டது.தற்போது, பாதிப்புகள் குறைந்து, பழைய நிலை திரும்பிவரும் சூழலில், மூலப்பொருட்களின் இருப்பு நிலையை படிப்படியாக கூட்டவேண்டும் என்பதுடன், அதிக கொள்முதல் கூடாது என ஜவுளித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுவருகிறது.
அவசரகால கொள்முதல் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக பருத்தி உள்ளிட்டவற்றை இருப்பு வைப்பதன் வாயிலாக விலை வீழ்ச்சி, ஏற்றம் போன்ற பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், சாதகமான சூழலுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் சம்மேளன ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் கூறியதாவது:நம் நாட்டில் கடந்தாண்டு செப்., மாதத்தில், 105 லட்சம் பருத்தி பேல்கள் (ஒரு பேல் - 170 கிலோ) இருப்பு இருந்தது. தவிர, வரும் ஆண்டிலும் பருத்தி உற்பத்தி, 360 லட்சம் பேல்களாக இருக்கும். இறக்குமதியும், 15 லட்சம் பேல்கள் என மொத்தம், 480 லட்சம் பேல்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது.அனைத்து மில்களுக்கான தேவை, 330 லட்சம் பேல்கள் போக மீதமும் இருக்கும். தேவைக்கேற்ப நுாற்பாலைகளுக்கு பருத்தி உள்நாட்டிலேயே கிடைக்கும். மேலும், மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்திடம், இந்திய பருத்திக் கழகம் மாதம் ஒருமுறை பருத்தி விலையை நிர்ணயிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இது உற்பத்தி பொருட்களின் விலையை சீராக வைக்க வழிவகுக்கும். நுால் ஏற்றுமதியும் குறைவாகவே உள்ளது. தற்போதைய நிலையில், மாதத்திற்கு, 80 மில்லியன் கிலோ அளவு என சராசரி ஏற்றுமதியை காட்டிலும், 40 சதவீதம் குறைவாக இருக்கிறது.இந்தியாவில் உள்ள மில்களின் கதிர்கள் கணக்கை எடுத்துக்கொண்டால் நுால் உற்பத்தியை காட்டிலும் கிட்டத்தட்ட, 70 லட்சம் கதிர்கள் அதிகமாக உள்ளது.
எனவே, ஜவுளித்தொழிலை சார்ந்தவர்கள் நுாலின் இருப்பை அதிகரிக்க தேவையில்லை.தேவைக்கேற்ப நுால் வாங்கினால் போதுமானது. அதிக கொள்முதல் விலை பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அவசரப்பட்டு அதிக கொள்முதல் செய்ய வேண்டாம். மில்கள் ஒரு 'ஆர்டர்' முடிந்ததும், அடுத்த 'ஆர்டர்' எடுக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X