அரசியல் செய்தி

தமிழ்நாடு

பண முதலைகளிடம் இருந்து தமிழகத்தை மீட்போம்! கோவில் வரலாற்றை சுட்டிக்காட்டி அவிநாசியில் கமல் பேச்சு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
அவிநாசி;''முதலையின் வாயில் சிக்கிய பாலகனை, சுந்தரமூர்த்தி நாயனார், பதிகம் பாடி மீட்டது போல், பண முதலைகளின் வாயில் இருந்து, தமிழகத்தை மீட்போம்,'' என, அவிநாசியில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தல புராணத்தை சுட்டிக்காட்டி, கமல் பேசினார்.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல், நேற்று பேசியதாவது:என் பேச்சை கேட்க வரும் கூட்டம், சினிமா நட்சத்திரத்தை
 பண முதலைகளிடம் இருந்து தமிழகத்தை மீட்போம்! கோவில் வரலாற்றை சுட்டிக்காட்டி அவிநாசியில் கமல் பேச்சு

அவிநாசி;''முதலையின் வாயில் சிக்கிய பாலகனை, சுந்தரமூர்த்தி நாயனார், பதிகம் பாடி மீட்டது போல், பண முதலைகளின் வாயில் இருந்து, தமிழகத்தை மீட்போம்,'' என, அவிநாசியில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தல புராணத்தை சுட்டிக்காட்டி, கமல் பேசினார்.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல், நேற்று பேசியதாவது:என் பேச்சை கேட்க வரும் கூட்டம், சினிமா நட்சத்திரத்தை பார்க்க வந்த கூட்டமல்ல. தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும், நேர்மையாளர்களின் கூட்டம்.முதலையின் வாயில் சிக்கிய பாலகனை, சுந்தரமூர்த்தி நாயனார், பதிகம் பாடி மீட்டார் என, இங்கு கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோன்று, பண முதலைகளின் வாயில் இருந்து, தமிழகத்தை மீட்க வேண்டும்.ஏழைகளை, ஏழையாகவே வைத்திருந்தால் தான், ஐந்தாண்டுகளுக்கு அவர்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், தமிழக அரசு, ஏழ்மையை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. வறுமை கோடு என்ற நிலைமாறி, செழுமை கோடு, அதற்கும் மேல் மக்களை கொண்டு செல்வதே எங்களின் திட்டம்.இவ்வாறு, அவர் பேசினார்.'நொய்யலை பார்த்தேன்; நொந்து போனேன்'திருப்பூர், காங்கயம் ரோடு,சி.டி.சி., டிப்போ அருகே, கமல் பேசுகையில், ''திருப்பூரில் அன்னிய நிறுவனங்களில் உள்ளது போன்ற கட்டமைப்பு இருந்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு தொழில்முனைவோரை உருவாக்கி இருக்க முடியும். திருப்பூரில், வீட்டு வாடகை, கல்வி, மருத்துவம் போக, கையில் மிஞ்சுவதை 'டாஸ்மாக்' பறித்துக் கொள்கிறது.''வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றுவது எங்கள் திட்டங்களில் ஒன்று. தரமான மருத்துவமனைகள் மக்களின் தேவை. நொய்யல் ஆற்றைபார்த்து நொந்து போனேன். சுற்றுச்சூழலுக்கான நல்ல திட்டங்கள் எங்களிடம் உள்ளது. மூன்று மாதத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு மாற்றத்தை கொண்டுவரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X