திருப்பூர்:மகளிர் குழு உறுப்பினராக உள்ள, 1.07 கோடி பெண்களுக்கு, முதல்வர் கையெழுத்திட்ட, பொங்கல் வாழ்த்து மடல் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில், 7.22 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்களில், 1.07 கோடி பேர் உறுப்பினராக உள்ளனர். மகளிர் குழு மேம்பாட்டுக்காக, 2011 முதல், 2020 வரை, 80, 624 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.'ஜல் ஜீவன் மிஷன்', துாய்மை பாரத இயக்கம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊட்டச்சத்து விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளில், மகளிர் குழுவினர் நேரடியாக பங்காற்றி வருகின்றனர்.ஊரக வளர்ச்சி அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வர் கையெழுத்துடன் கூடிய, ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து மடலை, 1.07 கோடி மகளிர் குழு உறுப்பினருக்கும், தனித்தனியாக அனுப்பி வருகிறோம். தபாலில் சென்றுசேர தாமதம் ஏற்படும் என்பதால், ஊரக வளர்ச்சி ஊழியர்கள், வீடுதேடி சென்று வழங்கி, கையொப்பம் பெற்றுவர உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE