ஆனைமலை:''வரும் தேர்தலில் தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்,'' என, பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆத்துப்பொள்ளாச்சியில், சமூக வலைதள தேசிய சிந்தனையாளர்கள் சங்கமம் சார்பில், ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற, பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:பா.ஜ., சார்பில் வலுவான தேர்தல் அறிக்கையை தயார் செய்ய, நாளை (இன்று) முதல், ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்துக்களை பெறுகிறோம். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் போதிய வளர்ச்சி இல்லாமலும், துவங்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமலும் உள்ளன.ஹிந்து சமய அறநிலையத்துறையில், பல்வேறு ஊழல்கள் தொடர்ந்து நடக்கிறது. ஹிந்துக்களுக்கு எதிராக மட்டுமே, அறநிலையத்துறை செயல்படுகிறது. ஹிந்து கோவில்களை விட்டு, அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.ஹிந்துக்களையும், பெண்களையும் கொச்சைப்படுத்தும், திருமாவளவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள், ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள். வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE