புதுச்சேரி; புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் விரிவாக்கப்பட்ட பொதுக் குழு கூட்டம் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.சங்கத் தலைவர் பிரேமதாசன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் பால மோகனன், அமைப்புச் செயலாளர்கள் கிறிஸ்டோபர், ஆனந்த கணபதி, மோகன கிருஷ்ணன், சேகர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில்,அரசு ஊழியர் சங்க சம்மேளனத்தின் 35 அம்ச கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 21ம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் 'ஒரு நாள் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தம்' செய்ய முடிவு செய்யப்பட்டது.புதுச்சேரி மின் துறை தனியார் மய முடிவை மத்திய அரசுகைவிட வேண்டும்.திட்ட அமலாக்க முகமையில் பணியாற்றிய ஊழியர்களை நிறுத்தாமல், அந்த ஊழியர்களை அங்கேயே பணியமர்த்த வேண்டும்.பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்றி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தேசிய சுகாதார இயக்க ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர். பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE