கவர்னரின் செயலை ஏற்கமாட்டோம்: தி.மு.க., வடக்கு மாநில அமைப்பாளர் அறிக்கை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி; அனைத்து போராட்டங்களிலும் தி.மு.க., பங்கேற்க வேண்டும் என எதிர்பார்ப்பது நாகரீக அரசியலாகப்படவில்லை என புதுச்சேரி தி.மு.க., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.,சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி சட்டசபை குறிப்பேடுகளைப் பார்த்தால் தி.மு.க., எந்த அளவில் பல்வேறு நேரங்களில் கவர்னரின் அத்துமீறியநடவடிக்கைகளை கண்டித்துள்ளது, போராடியுள்ளது

புதுச்சேரி; அனைத்து போராட்டங்களிலும் தி.மு.க., பங்கேற்க வேண்டும் என எதிர்பார்ப்பது நாகரீக அரசியலாகப்படவில்லை என புதுச்சேரி தி.மு.க., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.,சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:புதுச்சேரி சட்டசபை குறிப்பேடுகளைப் பார்த்தால் தி.மு.க., எந்த அளவில் பல்வேறு நேரங்களில் கவர்னரின் அத்துமீறியநடவடிக்கைகளை கண்டித்துள்ளது, போராடியுள்ளது என தெரியும்.மாநில அந்தஸ்துக்காக, எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளும் கட்சியாக இருந்த போதும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து போராடியுள்ளது.நிலைமை இப்படி இருக்கையில், கவர்னரை எதிர்த்து நடக்கும் மற்ற கட்சிகளின் அனைத்து போராட்டங்களிலும் தி.மு.க., பங்கேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், பங்கேற்காததால் குற்றம் சொல்வதும், நாகரீகமான அரசியலாகப்படவில்லை.நாங்கள் யாருடன் பேச வேண்டும், யாருக்கெதிராக போராட வேண்டும். யாரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் விஷயங்களை எங்களிடமே விடவேண்டும்.கவர்னரின் செயல்களை இப்போதும், எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X