புதுச்சேரி; புதுச்சேரி மெரினா கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கிய வாலிபர் யார் என அடையாளம் தெரிந்தது.புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையம் மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கு அருகே நேற்று முன் தினம் இரவு 30 வயதுள்ள தக்க ஆண் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர்.விசாரணையில் இறந்தது, வாணரப்பேட்டை, முருகசாமி நகர், விவேகானந்தர் வீதியைச் சேர்ந்த அலெக்சிஸ் பிராங்கிளின், 27; என தெரிந்தது. போலீசார் வழக்குப் பதிந்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE