புதுச்சேரி; புதுச்சேரி நேரு வீதி வியாபாரிகள் சங்கம் சார்பில், நேரு வீதி வணிக திருவிழா நடந்து வருகிறது. புதுச்சேரியில் நேரு வீதி வணிகம், பிரெஞ்ச் காலத்தில் இருந்து புகழ்பெற்று விளங்கி வருகிறது. நேரு வீதிக்கு வரும் வாடிக்கையாளர்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களையும், பணி புரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் வாழ வைத்து வருகின்றனர்.இதனால் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, நேரு வீதி வியாபாரிகள் சங்கம் சார்பில், பொங்கல் பண்டிகையையொட்டி, நேரு வீதி வணிக திருவிழாவை இரண்டாவது ஆண்டாக துவக்கியுள்ளனர். இத்திருவிழாவில், வாடிக்கையாளர்களுக்கு போட்டியோ, குலுக்கலோ கிடையாது. வணிக திருவிழாவில் பங்கேற்ற வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவோருக்கு நிச்சய பரிசளிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களின் தொகைக்கேற்ப பரிசு கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பன்களை நேரு வீதி கதவு எண்: 306, முத்து சில்க்ஸ் அருகிலும், நேரு வீதி கதவு எண்: 53, ஜெயா எம்போரியம் அருகிலும் வரும் பிப். 21ம் தேதி வரை பரிசு டோக்கனாக மாற்றிக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் மூன்று கூப்பன்களுக்கு பிஜியன் வாட்டார் பாட்டில், 7 கூப்பன்களுக்கு, செல்லோ ஒரு லிட்டர் அளவுள்ள இரண்டு ஹாட்பாக்ஸ், 12 கூப்பன்களுக்கு 3 லிட்டர் இம்பெக்ஸ் இட்லி கூக்கர், 18 கூப்பன்களுக்கு, 6 லிட்டர் இம்பெக்ஸ் பிரியாணி பாட், 24 கூப்பன்களுக்கு, இம்பெக்ஸ் 4 பீஸ் நான்ஸ்டிக் தவா செட், 30 கூப்பன்களுக்கு பீஜியன் 3 ஜார் மிக்சி, 40 கூப்பன்களுக்கு உஷா பெடஸ்டல் பேன் பரிசளிக்கப்படுகிறது. பரிசு டோக்கன்களை வரும் பிப். 26 முதல் மார்ச் 2ம் தேதி வரை, கொடுத்து பரிசு பெற்றுக் கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE