புதுச்சேரி; கொரோனா தொற்று பரவல் உள்ள சூழ்நிலையில் வேலை நிறுத்தம் போராட்டத்தை தொடர்ந்தால் மின் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என மின் துறை அரசு செயலர் தேவேஷ்சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது பேட்டி:மின்துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியது சட்டவிரோதமானது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டம் நடத்துகின்றனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வியில் தான் முடிந்தது. எனவே, மின்வினியோகத்தை தடையில்லாமல் வழங்க ஓய்வுப்பெற்ற மின் துறை அதிகாரிகளை பணிக்கு அழைக்க அரசு யோசித்து வருகிறோம். அலுவலக ஊழியர்கள், ஐ.டி.ஐ., மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பயிற்சி ஊழியர்களை களப்பணிக்கு பயன்படுத்த ஆலோசனை செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில் மருத்துவனைகளுக்கும், வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டிய கடமை மின் துறைக்கு உள்ளது. எனவே ஊழியர்கள் பணிக்கு உடனடியாக திரும்ப வேண்டும். வேலைக்கு திரும்பவில்லையெனில் பணிக்கு வராத நாள்களுக்கு சம்பளம் கிடைக்காது. அத்துடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE