புதுச்சேரி; புதுச்சேரி மாநில புதிய டி.ஜி.பி.,யாக ரன்வீர் சிங் கிருஷ்ணியா நேற்று பொறுப்பேற்றார்.புதுச்சேரி மாநில போலீஸ் டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவட்சவா, கடந்த மாதம் டில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். டில்லியில் பணிபுரிந்த ரன்வீர்சிங் கிருஷ்ணியா, புதுச்சேரி டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டார். இதற்கான ஆணையை மத்திய உள்துறை பிறப்பித்தது.புதிய டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிருஷ்ணியா நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி வந்தார். நேற்று காலை 9:05 மணிக்கு, போலீஸ் தலைமையகம் வந்த டி.ஜி.பி., கிருஷ்ணியாவுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை நடந்தது. பின்னர், போலீஸ் டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்றார். முன்னாள் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவட்சவா வாழ்த்து தெரிவித்தார். போலீஸ் எஸ்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் டி.ஜி.பி.,க்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கவர்னர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயண சாமியை, டி.ஜி.பி., கிருஷ்ணியா மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE