புதுச்சேரி; பொங்கல் திருவிழாவில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் பொங்கல் பண்டிகையொட்டி நடந்த கோலப் போட்டியில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என கவர்னர் கிரண்பேடிக்கு புகார் சென்றது.இதையடுத்து அவர் சமூக வலைதளத்தில் பதிந்த பதிவு:புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந் ததாக மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். கைகழுவதல் உட்பட பல சுகாதார பாதுகாப்பு வழிகளை கையாள வேண்டும். இல்லையெனில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து விடும். பொங்கல் திருவிழாவில் அதிகளவில் கூட்டம் கூடும். இப்போது தான் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.புதுச்சேரியில் கொரோனா தொற்று முழுதுமாக நீங்கவில்லை. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கையாளாவிட்டால், பொருளாதார ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் அதிக இழப்பை சந்திக்க நேடும்.தகுந்த முன்னெச்சரிக்கையுடன் எப்போதும் போல் இருங்கள். இவ்வாறு கவர்னர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE