புதுச்சேரி;மின்துறை ஊழியர்கள் போராட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.கலெக்டர் பூர்வா கார்க் விடுத்துள்ள செய்திக்குறிப் பில், புதுச்சேரி முழுதும் கடந்த 6ம் தேதி முதல் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மின்துறை அத்தியாவசிய பணி. காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், மின் வினியோகத்தில் இடையூறு ஏற்படுத்தும். மேலும் மின்சார வினியோகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே, 144 பிரிவின் கீழ் தடையற்ற மின்சார வினியோகத்திற்கு ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும். மின் துறை அலுவலகத்தில் கூட்டம் கூடுதல், ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. மீறி போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது, 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், தெரிவித்துள்ளார்.மேலும்மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்து, பூர்வாங்க பணியை துவக்கி யதால் தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளது.பொது சேவை புரியும் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது. வேலை நிறுத்தத்தை எதிர் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேவைப்பட்டால், ஓய்வு பெற்ற உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்கள், பயிற்சி முடித்த ஐ.டி.ஐ. தொழில்நுட்ப சான்றிதழ் பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவும், மின் பராமரிப்பு, மின்தடை பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.மின்துறை தலைமை அலுவலகம், துணை மின் நிலையங்கள், அனைத்து மின் துறை அலுவலங்களில் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது நன்னடத்தை விதிகளில் நடவடிக்கை எடுக்கப்படும்.போராட்ட காலம் 'பிரேக்கிங் சர்வீஸ்' ஆக கருத்தப்படும். இந்த காலத்திற்கு சம்பளம் வழங்கப்படாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE