விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி ஒன்றியம் பனப்பாக்கத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, வள மைய மேற்பார்வையாளர் காசிநாதன், மேலாண்மை குழு தலைவர் குணவதி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ஜெயந்தி வரவேற்றார்.சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா தலைமை தாங்கி குழு உறுப்பினர்களுக்கு கையேடுகளை வழங்கி , மேலாண்மை குழுவின் நோக்கம், திட்டம் தயாரித்தல், சுகாதாரம் மேம்பாடு, பள்ளி உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துதல், குழந்தைகளின் கடமைகள், உரிமைகள் , பேரிடர் கால மேலாண்மை, கல்வி தொலைக்காட்சி பயன்கள், குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்.மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னாள் பஞ்., தலைவர் கமலக்கண்ணன், ஓய்வு பெற்ற போக்குவரத்து கண்காணிப்பாளர் பழனி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர் இருதயராஜ், ஆசிரியர்கள் லட்சுமிநாராயணன், சம்பூர்ணம், விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஜே.ஆர்.சி., மாவட்ட இணை கன்வீனர் தமிழழகன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE