கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கள்ளக்குறிச்சி நகரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், அருண்மொழி, ஸ்டாலின் ராஜரத்தினம், இளங்கோவன், பிரசாத், அன்பு, பழனி ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர். பஸ் ஸ்டேண்ட், கச்சேரி சாலை பகுதிளில் உள்ள ஓட்டல்கள், கடைகள், பேக்கரி, ஸ்வீட் கடைகளில் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் சுகாதார அளவீடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, 15 லிட்டர்., காலாவதியான குளிர்பானங்கள், 5 கிலோ கூடுதல் நிறம் கொண்ட ஸ்வீட்கள், 10 கிலோ லேபிள்கள் இல்லாமல் பேக் செய்த உணவுப்பெருட்கள், 5 கிலோ கூடுதல் நிறமேற்றப்பட்ட பட்டாணி, 10 கிலோ பழங்கள், 5 கிலோ சிக்கன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாதுகாப்பற்ற முறையில் உணவு தயாரித்த 27 கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நியமன அலுவலர் வேணுகோபால் அறிவுரைப்படி, பிரியாணி கடைகளில் விளம்பரம் செய்யும் வகையில் பாத்திரங்களை தட்டுவதை கண்டிப்பாக நிறுத்திட வேண்டும்என எச்சரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE