விழுப்புரம்; தைப்பூச விழாவிற்கு, பொது விடுமுறை அறிவித்த தமிழக அரசிற்கு, வள்ளலார் அருள்மாளிகை சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை மேனேஜிங் டிரஸ்டி, அண்ணாமலை அறிக்கை;தைப்பூசம் என்ற சொல்லுக்கு பூரண விளக்கமளித்த வடலுார் ராமலிங்க அடிகளாரை புரிதல் இல்லாத காரணத்தினால் மறந்து விட்டது.தமிழக அரசு. 19-ம் நுாற்றாண்டில், சுத்த சன்மார்க்கமும், தமிழும் தழைத்தினிதோங்க நம் தமிழகத்தே வருவிக்கவுற்றவர் வள்ளலார் ஆவார். அவரே உலகத்தாருக்கு தைப்பூசம் எனும் சொல்லுக்கு முழு விளக்கமளித்தவர்.வள்ளலார் கடந்த 25.01.1872ல், வடலுார் சத்திய ஞானசபையில், பிரஜோத்பத்தி வருடம் தை 13-ம் தேதி முதன் முதலில் தைப்பூச ஜோதி தரிசனம் காண்பித்தார். இதை தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி 28ம் தேதி 150-வது பொன் விழா ஆண்டாக தைப்பூசம், கொண்டாடப்பட உள்ளது.தமிழக அரசு தைப்பூச தினத்தை முருகன் பக்தர்களுக்கு அரசு பொது விடுமுறையாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு, விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE