பொது செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரம் காளைகளுக்கு நடை, ஓட்டம், நீச்சல் பயிற்சி

Added : ஜன 12, 2021
Share
Advertisement
அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் ஜன.,14ல் நடக்கும் ஜல்லிக்கட்டிற்காக காளைகளுக்கு அப்பகுதியினர் உற்சாகத்துடன் பயிற்சி அளித்து வருகின்றனர்.மாரி: கொரோனா காலத்திலும் ஜல்லிக்கட்டு நடப்பது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. பரம்பரை பரம்பரையாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம். எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் எனது காளைகள் பங்கேற்று பரிசுகள்

அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் ஜன.,14ல் நடக்கும் ஜல்லிக்கட்டிற்காக காளைகளுக்கு அப்பகுதியினர் உற்சாகத்துடன் பயிற்சி அளித்து வருகின்றனர்.

மாரி: கொரோனா காலத்திலும் ஜல்லிக்கட்டு நடப்பது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. பரம்பரை பரம்பரையாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம். எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் எனது காளைகள் பங்கேற்று பரிசுகள் வெல்லும். தினமும் காலை 20 நிமிடங்கள் நடை பயிற்சியும், தொடர்ந்து 15 நிமிடங்கள் ஓட்ட பயிற்சியும், அடுத்ததாக கண்மாயில் 30 நிமிடங்கள் நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

குறிப்பாக சீறிப்பாயும் பயிற்சியும், பார்வை கூர்மை பயிற்சியும், மண் குத்தும் பயிற்சியும், கூட்டத்தினரை கண்டால் அவர்களிடம் பிடிபடாமல் தப்பித்து துள்ளிக் குதித்து வெளியேறும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.காளைகளுக்கு பருத்திவிதை, இரும்பு சோளம், கேப்பை, பச்சரிசி தவிடு, பேரிச்சம்பழம் உணவாக கொடுக்கிறோம். நீச்சல் பயிற்சிக்கு முன்பாக இரண்டு நாட்டுக்கோழி முட்டைகளும் கொடுக்கிறோம்.ஜல்லிக்கட்டு காளைகளை போட்டிகளில் பங்கெடுக்க வைப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X