பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : ஜன 12, 2021
Share
Advertisement
அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மனுமதுரை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் விவசாயிகள் நீரில் மூழ்கி அழுகிய நெற்கதிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: குலமங்கலம், சமயநல்லுார், தேனுார், ஊர்மெச்சிகுளம் பகுதியில் சமீபத்திய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து விட்டன.

அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மனு

மதுரை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் விவசாயிகள் நீரில் மூழ்கி அழுகிய நெற்கதிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: குலமங்கலம், சமயநல்லுார், தேனுார், ஊர்மெச்சிகுளம் பகுதியில் சமீபத்திய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து விட்டன. விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.

குருவித்துறையில் ஜல்லிக்கட்டு

வாடிபட்டி தாலுகா கோவில் குருவித்துறை கிராமத்தினர் ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன்மாறன், ஊராட்சி தலைவர் நாகராஜன், வழக்கறிஞர் திருமுருகன் தலைமையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரனிடம் மனு அளித்தனர். அவர்கள் கூறுகையில், ''குருவித்துறை சித்திரரத வல்லபெருமாள் கோயில், குருபகவான் கோயில் பொங்கல் விழாவையொட்டி தை 3 ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.

கிராமத்தினர் முற்றுகை

திருப்பரங்குன்றம் தாலுகா நெடுமதுரையை சேர்ந்த கிராமத்தினர் கண்மாய் தண்ணீரை திருப்பி விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கூறுகையில், 'நிலையூர் கம்பிக்குடி கால்வாய் வழியாக வரும் நீரை கொம்பாடி பகுதிக்கு திருப்பி விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

வாழைக்கு விலையில்லை

மதுரை சமூக ஆர்வலர் சுந்தரராஜ் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மேலுார், வாடிபட்டி, அலங்காநல்லுார் மற்றும் மதுரையை சுற்றி ஏராளமான விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். தற்போது 120 காய்கள் உள்ள வாழைத்தார் ரூ.100 க்கு மட்டுமே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.கடந்தாண்டு ரூ.300 வரை விற்கப்பட்டது. மற்ற மாவட்டங்களை போல கிலோகணக்கில் வாழை கொள்முதல் செய்ய நடவடிக்கை தேவை, என கூறியுள்ளார்.

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு

மதுரை தத்தனேரி தனலட்சுமி தலைமையில் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: அனையூர் சிலையனேரியில் 2009 ல் 129 பேருக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்திற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பாதையை கால்வாயாக மாற்றியுள்ளனர். இப்பகுதியில் தனிநபர் கிணற்று நீரை சட்ட விரோதமாக எடுத்து விற்பதால்நிலத்தடிநீர் பாதிக்கும் அபாயம் உள்ளது. பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாலம் அமைத்து தர வேண்டும், என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X