சங்கராபுரம்; சங்கராபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் விவசாயிகள் தின விழா கொண்டாடப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் விவசாயிகள் தின விழா கொண்டாடப் பட்டது.லயன்ஸ் சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் வரதராஜன்,துரைராஜ், கார்த்தி, அஸ்மதுல்லா,ராஜா முன்னிலை வகித்தனர். செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.சங்கராபுரம் பகுதியில் வயல்களில் வேலை செய்யும் தாய்மார்கள், விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்ககப்பட்டு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.பொருளாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE