திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் நுாலகம், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மணலுார்பேட்டையில் இ--பயிர் மருத்துவ முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட நுாலக ஆணைக்குழு, திருக்கோவிலுார் கிளை நுாலகம், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மணலுார்பேட்டை மற்றும் தேவரடியார்குப்பம் நுாலகங்களில் இ--பயிர் மருத்துவ முகாம் நடந்தது. மணலுார் பேட்டையில் நடந்த முகாமிற்கு நுாலகர் அன்பழகன் தலைமை தாங்கினார். நுாலகப்பணியாளர் கோவிந்தன் வரவேற்றார்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் கிரிஜா தலைமையில், புதுச்சேரி பயிர் மருத்துவர் தனுசு அம்மாள் உள்ளிட்ட குழுவினர் இணைந்து முகாமை நடத்தினர்.இதில் சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிர்களின் மாதிரிகள் மற்றும் மண் மாதிரிகளை கொண்டு வந்து நேரடியாக காண்பித்தனர்.பயிர் பாதுகாப்பு மற்றும் மண் வளம் குறித்த நடவடிக்கைகளை பயிர் மருத்துவர்கள் விவசாயிகளின் மொபைல் போனுக்கு தமிழ் வழியில் குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தார்கள். விதை நேர்த்தி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேற்பார்வையாளர் வாசுகி, செவிலியர் அலமேலு, சாந்தா, சக்கரவர்த்தி, நுாலகர் சாந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். உதவியாளர் சுந்தரி, விக்னேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.நுாலக பணியாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE