மும்பை : மும்பை அந்தேரியில் வசித்து வந்த பிரபல வானியற்பியல் அறிஞர் சசிகுமார் மதுசூதன் சித்ரே 84, நேற்று மரணமடைந்தார்.
பத்ம பூஷன் விருது பெற்ற இவர் வயோதிகம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.இவர் மும்பை டி.ஐ.எப்.ஆரில் மூத்த பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்திய வானியல் சங்க தலைவராக இருந்ததோடு பல்வேறு கமிட்டி உறுப்பினராக இருந்து இந்திய அறிவியல் கொள்கைகளை வகுத்துள்ளார். பிரபல இயற்பியல் அறிஞரான மறைந்த ஸ்டீவன் ஹாக்கிங் உடன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் 1962-63ல் இவர் பி.எச்.டி. மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE