பண்ருட்டி மார்க்கெட்டில் கழவு நீர் தேக்கம்| Dinamalar

பண்ருட்டி மார்க்கெட்டில் கழவு நீர் தேக்கம்

Added : ஜன 12, 2021
Share
பண்ருட்டி; பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் கழிவுநீர் வாய்க்கால்கள் கடந்த 5 நாட்களுக்கு முன் துார் வாரப்பட்டது. அதன் பின் வாய்க்கால் பகுதி மூடப்படவில்லை.இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும்

பண்ருட்டி; பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் கழிவுநீர் வாய்க்கால்கள் கடந்த 5 நாட்களுக்கு முன் துார் வாரப்பட்டது. அதன் பின் வாய்க்கால் பகுதி மூடப்படவில்லை.இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டிற்கு அதிகளவில் பொதுமக்கள் வரும் நிலையில், கழிவுநீர் வாய்க்காலை, மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X