இந்தியாவில் பலம் வாய்ந்த அரசு: இம்ரான் அலறல்

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 12, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : ''கடந்த, 73 ஆண்டுகளாக இல்லாத வகையில், ஒரு பலம் வாய்ந்த அரசு, தற்போது இந்தியாவில் இருப்பதால், பாகிஸ்தான் ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின், எல்லையில் பாக்., படைகளின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்க, நம்

இஸ்லாமாபாத் : ''கடந்த, 73 ஆண்டுகளாக இல்லாத வகையில், ஒரு பலம் வாய்ந்த அரசு, தற்போது இந்தியாவில் இருப்பதால், பாகிஸ்தான் ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.latest tamil newsபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின், எல்லையில் பாக்., படைகளின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்க, நம் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. பயங்கரவாத குழுக்களை ஆதரித்து வரும் பாக்., நடவடிக்கைகளுக்கு, உலக அரங்கில் நெருக்கடிகளை மத்திய அரசு ஏற்படுத்தியது.கடந்த, 2016ல், ஜம்மு -- காஷ்மீரின் யுரி பகுதியில், பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நம் வீரர்கள், 18 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் நடந்த, 11 நாட்களில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது, நம் வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.கடந்த, 2019ல், காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ஜெய்ஷ் -- இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, பாக்.,கின் பாலக்கோட் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து, நம் விமானப் படையினர் நடத்திய தாக்குதலில், 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன் பின், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.


latest tamil newsபயங்கரவாத குழுக்களுக்கு பாக்., அளித்து வரும் ஆதரவு குறித்து, சர்வதேச சபையில், மத்திய அரசு, தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. இதன் பலனாக, எப்.ஏ.டி.எப்., எனப்படும், பொருளாதார நடவடிக்கைகளுக்கான அதிரடி குழு, பாக்.,கை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது. இது, பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாக்., பிரதமர் இம்ரான் கான், பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாகபரவி வருகிறது. இது, பாகிஸ்தானின், 73வது சுதந்திர தினத்தன்று, அவர் பேசிய வீடியோ எனக் கூறப்படுகிறது.

அதில், இம்ரான் கான் பேசியுள்ளதாவது: இந்தியாவில், தற்போது ஆட்சியில் உள்ள அரசை போல, கடந்த, 73 ஆண்டுகளில், ஓர் அரசு அமையவில்லை. தற்போது பலம் வாய்ந்த அரசின் ஆட்சி, இந்தியாவில் நடக்கிறது. எனவே, நம் ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தில், நாம் இருக்கிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202103:54:41 IST Report Abuse
J.V. Iyer பாகிஸ்தானை அடக்கியபின், உள்நாட்டு தேச விரோதிகளை தமிழகத்திலிருந்து விரட்ட ஆயத்தம்.
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
12-ஜன-202119:32:57 IST Report Abuse
Sivaraman திரு மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியவர்கள் திரும்ப போ என்று சொன்னவர்கள் யாராக இருப்பார்கள் ?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-202120:15:56 IST Report Abuse
தமிழவேல் திராவிஷன், மதமாரி, மூர்கன், தேச-சமூக விரோதி, டாஸ்மாக் மட்டை ஓசி பிரியாணி, டம்ளர், டுமிலன்கள். சந்தோஷமா 😂...
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-202118:13:18 IST Report Abuse
Saravanan பாலக்கோடு சம்பவத்துக்கு எவிடென்ஸ் வேணும்ன்னு கேட்டு நமது ராணுவத்தை அவமரியாதை செய்த பப்புவையும் சுடலையையும் ராணுவ கோர்ட்டில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் அப்பத்தான் தேச விரோதிகளுக்கு ஒரு பயம் உண்டாகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X