ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்றுப் பகுதிகளில் பெய்த மழையால் கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது.
சத்திரப்பட்டிவாகைகுளம் கண்மாய் நிரம்பி அதன் மறுகால் தண்ணீர் நத்தம்பட்டி ரோடு தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்றது.ராஜபாளையம் சுற்று பகுதிகளான சேத்துார், தேவதானம், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அத்துடன் மேற்கு தொடர்ச்சி மலையிலும் கன மழை பெய்தது. இதனால் ஆறுகள் ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து கண்மாய்களை நிறைத்து மறுகால் பாய்ந்து வருகிறது. சத்தி ரப்பட்டி வாகைக்குளம் மறுகால் பாய்ந்து நத்தம்பட்டி ரோடு தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்றது. மழையோடு வீசிய காற்றால் நெற்பயிர்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE